சுன்னாகத்தில் நாளை அரும்புகள் உலகம் நூல் அறிமுக விழாவும் கலைஞர் கெளரவிப்பும்

யாழிசைக் கவித் தடாகத்தின் ஏற்பாட்டில் கவிஞர்.உடுவிலூர் கலாவின் அரும்புகள் உலகம் நூல் அறிமுக விழாவும் கலைஞர் கெளரவிப்பும்-2024 நிகழ்வு நாளை வியாழக்கிழமை (04.04.2024) பிற்பகல்-01.30 மணி முதல் சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் உடுவில் கலாசார உத்தியோகத்தர் திருமதி.பத்மராணி சிவஞானசுந்தரம் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் திருமதி.சாரதா உருத்திரசம்பவன் கெளரவ விருந்தினராகவும், சித்த மருத்துவர் தியாகராஜா சுதர்மன், உடுவில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.விஜிதா செல்வகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் கலைஞர் கெளரவிப்புடன் கரகாட்டம், பட்டிமன்றம் ஆகிய கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

(செ.ரவிசாந்)