வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் ஜி.சுகுணன் இன்று புதன்கிழமை(03.04.2024) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வடக்கு மாகாணச் சுகாதாரத் துறையில் பல்வேறு புதிய நியமனங்களை சுகாதார அமைச்சு அண்மையில் வழங்கியிருந்த நிலையில் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக ஜி.சுகுணன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, இவர் முன்னதாக மட்டக்களப்புப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.