யாழ். திருநெல்வேலி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய மண்டலாபிஷேகப் பூர்த்தி உற்சவம் நாளை சனிக்கிழமை (20.04.2024) காலை-08.30 மணியளவில் 1008 சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
நாளை முற்பகல்-11 மணியளவில் அபிஷேகம் இடம்பெறும். நண்பகல்-12 மணியளவில் விசேட பூசையைத் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.
நாளை மாலை-06 மணியளவில் விசேட பூசை இடம்பெறும். இரவு-07 மணியளவில் வசந்தமண்டப பூசை, நவசக்தி அர்ச்சனை, திருவூஞ்சல் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்பாள் அழகிய பூந்தண்டிகையில் வீதி வலம் வரும் திருக்காட்சியும் இடம்பெறும்.