கரவெட்டியில் நாளை இரத்ததான முகாம்


கரவெட்டிப் பிரதேச செயலக நலன்புரிச் சங்கம் நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை (20.04.2024) காலை-09 மணி முதல் மாலை-03 மணி வரை கரவெட்டிப் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

உதிரம் கொடுத்து உயிரைக் காக்க அனைவரையும் இரத்ததான முகாம் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.