அன்னை பூபதியின் உன்னத தியாகம்: நல்லூரில் கதறிய பெண்கள்

தமிழ்மக்களுக்காக அகிம்சை வழியில் தொடர்ச்சியாகப் பல தினங்கள் போராடித் தன்னுயிரை ஈகம் செய்த நாட்டுப் பற்றாளர் அன்னைபூபதித் தாயின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(19.04.2024) முற்பகல் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சில பெண்கள் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் போது கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைவரின் மனங்களையும் நெகிழ வைத்தது.