குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் தீர்த்தத் திருவிழா நாளை: ஏற்பாடுகள் பூர்த்தி


குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா சித்திரைப் பூரணை தினமான நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல்-11 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு ஆலயத்தின் வடக்குப் பக்கமாக அமைந்துள்ள தீர்த்தக் கேணி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதுடன் தீர்த்தத் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.