கோப்பாய்ப் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை திங்கட்கிழமை (29.04.2024) காலை-09 மணி முதல் கோப்பாய்ப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
எனவே, இரத்ததானம் செய்ய விருப்பமுடைய அனைவரும் கலந்து கொண்டு இரத்ததான நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.