மறைந்த முதுபெரும் எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், குப்பிழான் ஐ.சண்முகனின் இரசனைக் குறிப்புகள், குப்பிழான் ஐ.சண்முகனின் சிறுகதைகள் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழாவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.04.2024) முற்பகல்-10 மணி முதல் யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சண்முகனின் சகோதரர் ஐயாத்துரை முருகலிங்கம் தனது சகோதரர் நினைவுகளைச் சுமந்து மனமுருகி இரண்டு பாடல்கள் பாடினார். அவரது பாடல்கள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைவரையும் கட்டிப் போடும் வகையில் அமைந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.