இணுவில் மஞ்சத்தடி அருணகிரிநாதர் சிவசுப்பிரமணியர் சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் சப்பரத் திருவிழா இன்று திங்கட்கிழமை (29.04.2024) இரவு சிறப்புற இடம்பெற்றது.
இதன்போது மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சப்பரத்தில் வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமான் உள்ளிட்ட முத் தெய்வங்கள் அடியவர்கள் புடைசூழ வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளாத் திருக்காட்சியாக அமைந்தது.
இதேவேளை, நாளை செவ்வாய்க்கிழமை(30.04.2024) முற்பகல்-10 மணிக்கு இவ் ஆலயத்தின் தேர்த் திருவிழா நடைபெறவுள்ளது.