உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாளை மாபெரும் இரத்ததான முகாம்

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஏழாலை இந்து இளைஞர் சபையினரின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை புதன்கிழமை (01.05.2024) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை ஏழாலை மேற்கு உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இரத்ததானம் வழங்க ஆர்வமுள்ளவர்கள் 0778221075 மற்றும் 0770098035 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மேலும் கேட்டுள்ளனர்.