கிராமம் முழுவதும் வலம் வந்த குப்பிழான் கன்னிமார் கெளரித் தாய்

 


குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டுக் கிராம ஊர்வலம் கடந்த வெள்ளிக்கிழமை (26.04.2024) மாலை-05.15 மணியளவில் அடியவர்களின் அரோகராக் கோஷ முழக்கங்களுடன் மேற்படி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமாகியது.  

சிறியரக உழவியந்திரத்தில் அம்பாள் கிராமம் முழுவதும் வலம் வந்ததுடன் கிராமத்தில் அமைந்துள்ள ஆலயங்களில் ஆலய நிர்வாகத்தினரும், வீட்டு வாசல்கள் தோறும் அடியவர்களும் பூரண கும்பம் வைத்தும், பிரசாதங்கள் படைத்தும் அம்பாளை மெய்யுருக வழிபட்டனர். அம்பாளின் கிராம ஊர்வலம் கடந்த சனிக்கிழமை (27.04.2024) அதிகாலை-02 மணியளவில் மீண்டும் ஆலயத்தைச் சென்றடைந்து நிறைவுக்கு வந்தது.


இம்முறை கிராம ஊர்வலம் நிறைவடையும் வரை ஆண் அடியவர்களுடன் பெண் அடியவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.