கோண்டாவில் மகாகாளி அம்பாள் புதிய திருமஞ்சத்தில் பவனி

கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ மகாகாளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் திருமஞ்சத் திருவிழா இன்று சனிக்கிழமை (20.04.2024) இரவு மிகவும் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.

இன்று இரவு-07 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து காளி அம்பாள் ஆலய உள் வீதியில் எழுந்தருளி வலம் வந்து ஆலய முன்றலில் நிறுத்தப்பட்டிருந்த புதிய அழகிய திருமஞ்சத்தில் எழுந்தருளினாள். அதனைத் தொடர்ந்து அடியவர்கள் புடைசூழ மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய  திருமஞ்சப் பவனி ஆரம்பமானது.   

இதேவேளை, புலம்பெயர்ந்து தற்போது லண்டனில் வாழ்ந்து வரும் கோண்டாவிலைச் சேர்ந்த வே.சுப்பிரமணியம் குடும்பத்தினரின் முழுமையான நிதிப் பங்களிப்பில் குறித்த புதிய திருமஞ்சம் உருவாக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.