இணுவில் பொதுநூலக சனசமூக நிலையத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு லம்போதரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் சதுரங்கச் சுற்றுப் போட்டி நிகழ்வு-2024 நாளை-21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-07.30 மணி முதல் இணுவில் பொதுநூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
6 வயது முதல் 17 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்குப் பிரிவு ரீதியாகவும், 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் திறந்த போட்டியாகவும் குறித்த போட்டிகள் இடம்பெறும். ஆண், பெண் இருபாலாரும் குறித்த போட்டிகளில் பங்குபெற முடியும்.
இதேவேளை, யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பாடசாலை மாணவர்களுக்கும் இதுதொடர்பான அறிவித்தல்கள் பாடசாலை அதிபர் மூலம் விடுக்கப் பெற்று விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய போட்டியில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் போட்டி இடம்பெறும் நாளான நாளைய தினம் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் தமது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துப் போட்டியில் பங்குபற்ற முடியுமெனவும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.