வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய நீண்டகாலப் பாரம்பரியம் மிக்க வருடாந்தப் பொங்கல் விழா கடந்த செவ்வாய்க்கிழமை (09.04.2024) மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
அன்றையதினம் மாலை-04.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள் அலங்கார நாயகியாக நூற்றுக் கணக்கான அடியவர்கள் புடைசூழ உள்வீதி, வெளிவீதியில் எழுந்தருளி உலா வந்தாள்.
(செ.ரவிசாந்)