ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி மஹோற்சவம் ஆரம்பம்

'ஏழாலை’ எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் ஒன்றான ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14.04.2024) காலை-09 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமான், விநாயகப் பெருமான் ஆகிய தெய்வங்கள் அடியவர்கள் புடைசூழ உள்வீதி, வெளிவீதியில் எழுந்தருளி உலா வந்தனர்.     


தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் நடைபெறும். 

இவ் ஆலய மஹோற்சவத்தில் எதிர்வரும்- 18 ஆம் திகதி வியாழக் கிழமை மாம்பழத் திருவிழாவும், 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருப்புகழ் உற்சவமும், 20 ஆம் திகதி சனிக்கிழமை பூந்தண்டிகை உற்சவமும், 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சப்பரத் திருவிழாவும், 22 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09 மணியளவில் தேர்த் திருவிழாவும், 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-09 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.