பேராசிரியர்.சிவலிங்கராஜாவின் சிறப்பிதழ் வெளியீட்டு விழா


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர். எஸ்.சிவலிங்கராஜாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் பணிகள் அனைத்தையும் உள்ளடக்கி 'ஜீவநதி' வெளியிடும் எஸ்.சிவலிங்கராஜா சிறப்பிதழ் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (05.05.2024) பிற்பகல்-03.30 மணி முதல் திருநெல்வேலியிலுள்ள ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மூத்த கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளரும், எழுத்தாளருமான த.அஜந்தகுமார் நூலின் வெளியீட்டுரையையும், எழுத்தாளர்களான திருமதி.கோகிலா மகேந்திரன், இ.இராஜேஸ்கண்ணன், அ.பெளநந்தி ஆகியோர் கருத்துரைகளையும் நிகழ்த்தவுள்ளனர். 

இதேவேளை, இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.