சைவசமய குரவர்களில் மூத்தவரான திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (03.05.2024) கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
நாளை முற்பகல்-11 மணிக்கு விநாயகப் பெருமானுக்கும், திருநாவுக்கரசு நாயனாருக்கும் விசேட பூசை வழிபாடுகளும் திருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரப் பதிகங்கள் பண்ணுடன் ஓதுதலும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ. சிவகதிர்காமநாதக் குருக்கள் தெரிவித்துள்ளார்.