ரணில் ஐயா... ரணில் ஐயா.... அரிசி விலை என்ன விலை?: யாழ்.மேதினப் பேரணியில் இப்படியும் கோஷங்கள்!

 

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் புரட்சிகர மேதினப் பேரணி நேற்று முன்தினம் புதன்கிழமை (01.05.2024) மாலை-04.30 மணியளவில் யாழ்.ஆரியகுளம் சந்தியிலிருந்து ஆரம்பமானது. குறித்த பேரணி யாழ்.நகரில் அமைந்துள்ள றிம்மர் மண்டபம் வரை முன்னெடுக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து அங்கு பொதுக் கூட்டமும் இடம்பெற்றது.   

பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பிப் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் "ரணில் ஐயா... ரணில் ஐயா.... அரிசி விலை என்ன விலை?", "ரணில் ஐயா....ரணில் ஐயா...மா, பாண் என்ன விலை?", "ரணில் ஐயா...ரணில் ஐயா....சீனி விலை என்ன விலை? தேநீர் விலை என்ன விலை?" எனவும் உரத்துக் கோஷங்கள் எழுப்பினர். குறித்த கோஷங்கள் பொதுமக்கள் பலரதும் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.