லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

 


இன்று வெள்ளிக்கிழமை(04.05.2024) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை (03.05.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்பட்டுப் புதிய விலை 3,940 ரூபாவாகவும்,  5 கிலோக்கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 70 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1582 ரூபாவாகவும், 2.3 கிலோக்கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 32 ரூபாவினால் குறைக்கப்பட்டுப் புதிய விலை 740 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.