பிற்போடப்பட்டது வருடாந்த விளையாட்டு விழா!

காரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா-2024 நாளை செவ்வாய்க்கிழமை (21.05.2024) பிற்பகல்-02.30 மணியளவில் காரைநகர் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

எனினும், சீரற்ற காலநிலை காரணமாக வருடாந்த விளையாட்டு விழா குறித்த திகதியில் நடைபெறாது பிற்போடப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச செயலகத்தினர் அறிவித்துள்ளனர்.