சுன்னாகத்தில் உலகப் புத்தக தின நிகழ்வு

சுன்னாகம் பொதுநூலக நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் உலகப் புத்தக தின நிகழ்வு-2024 நாளை  வெள்ளிக்கிழமை (10.05.2024) காலை-09.30 மணி முதல் சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் சுன்னாகம் உப அலுவலகப் பொறுப்பதிகாரி திருமதி.வி.கெளரி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் வடக்கு மாகாண ஓய்வுநிலைப் பிரதம செயலாளர் வே.பொ.பாலசிங்கம் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் திருமதி.சாரதா உருத்திரசம்பவன் கெளரவ விருந்தினராகவும், வலிகாமம் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ச.கிருபானந்தன், யாழ்.மாவட்டக் கலாசார உத்தியோகத்தர் இ.கிருஷ்ணகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர். 

இதேவேளை, குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.