கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்


2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை திங்கட்கிழமை (06.05.2024) ஆரம்பமாகவுள்ளது.  

இம் முறை 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65,331 தனியார் விண்ணப்பதாரர்களுமாக மொத்தமாக 452,979 பரீட்சார்த்திகள் நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.