இணுவிலில் திருமுறைப் பண்ணிசை விழாவும் நூல் வெளியீடும்

இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் திருநெறிய தமிழ்மறைக் கழகம், அறநெறிப் பாடசாலை நடாத்தும் திருமுறைப் பண்ணிசை விழாவும் 'பரராசம்' நூல் வெளியீடும் நாளை திங்கட்கிழமை (17.06.2024) காலை-08.30 மணி முதல் பரராஜசேகரப் பிள்ளையார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

திருநெறிய தமிழ்மறைக் கழகத்தின் தலைவர் ச.முகுந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர்.பொன்னம்பலம் இராமநாதன் ஆற்றுகை மற்றும் காண்பியக் கலைகள் பீடத்தின் இசைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.கிருபாசக்தி கருணா, இசைத்துறை ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் திருமதி.கோமளவல்லி தேவதாசன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர். 

வலிகாமம் வலய ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் சைவப்புலவர் சு.தேவமனோகரன் நூலின் வெளியீட்டுரையையும்,  மதிப்பீட்டுரையையும் ஆற்றுவார்.