சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இன்னிசை நிகழ்வு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தெய்வீக இன்னிசை நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (14.06.2024) முற்பகல்-11 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.    

இந் நிகழ்வில் ஆசிரியை திருமதி.அபிராமி சுதன் கலந்து கொண்டு பக்கவாத்திய இசைக் கலைஞர்களின் இசையுடன் தெய்வீகப் பாடல்களைப் பண்ணுடன் பாடினார்.