“நீலப் பொருளாதாரம்” (BLUE ECONOMY) எனும் கருப் பொருளை முன்வைத்து பருத்தித்துறையில் தொடங்கி மாதகல் வரை நீலக் கடற்கரை ஓரமாக ஈ குருவி நிறுவனமும், புதிய வெளிச்சம் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நீண்ட விழிப்புணர்வு நடைபயணம் நாளை திங்கட்கிழமை (17.06.2024) அதிகாலை-05.20 மணியளவில் பருத்தித்துறை வெளிச்ச வீட்டிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் பங்குபற்றுபவர்களுக்கு வல்வெட்டித்துறையில் காலை உணவும், நகுலேஸ்வரத்தில் மதிய உணவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை-05.20 மணியளவில் மாதகல் சிவன் ஆலயத்தடியைச் சென்றடைந்து விழிப்புணர்வு நடைபயணம் நிறைவுக்கு வரும்.
உடல் நலம், உள நலத்தைக் கருத்திற் கொண்டும், கடற்கரை வழியே கொட்டிக் கிடக்கும் வளங்களைப் பற்றியும், அவை தரக் கூடிய பொருளாதார மேன்மை தொடர்பிலும் பேசிக் கொண்டே நடக்கும் இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.