யாழ் மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்-2024 நாளை செவ்வாய்க்கிழமை (18.06.2024) காலை-09.30 மணியளவில் கல்வியங்காடு சட்டநாதர் சிவன் ஆலய மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
யாழ் மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் ஆ.உதயசங்கர் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால, யாழ் மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ரஜீவன் சிவகெளரி, வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.