எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவது அவசியமற்றது எனக் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை(15.06.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாங்கள் இன்னும் தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினைகளாக வைத்திருப்பதற்காகத் தான் தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரத்தை முன்னெடுத்துச் செல்வதாக நான் கருதுகிறேன் எனவும் கூறினார்.