யாழில் நீண்ட விழிப்புணர்வு நடைபயணம் வெற்றிகரமாக நிறைவு

"நீலப் பொருளாதாரம்” எனும் கருப் பொருளை முன்வைத்து பருத்தித் துறையில் தொடங்கி மாதகல் வரை நீலக் கடற்கரை ஓரமாக ஈ குருவி நிறுவனமும், புதிய வெளிச்சம் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நீண்ட விழிப்புணர்வு நடைபயணம் இன்று திங்கட்கிழமை (17.06.2024) பருத்தித்துறை வெளிச்ச வீட்டிலிருந்து ஆரம்பமாகி மாதகல் சிவன் ஆலயத்தடியில் நிறைவுபெற்றது.

40 கிலோ மீற்றரைக் கொண்ட குறித்த விழிப்புணர்வு நடை பயணத்தில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.