உடுவில் கால்நடை வைத்தியர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் பண்ணையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் வியாழக்கிழமை (13.06.2024) ஏழாலை புங்கடி சொர்ணாம்பிகை உடனுறை அம்பலவாணேஸ்வரர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் உடுவில் கால்நடை மருத்துவர் அலுவலகப் பொறுப்பதிகாரி மருத்துவர் திருமதி.ஆர்.மீனயோகினி, கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் களான ஆர்.நிஷாந்தன், திருமதி.எஸ்.லக்சிகா ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு கருத்துரைகள் நிகழ்த்தினர். இந்த வகுப்பில் ஏழாலையைச் சேர்ந்த 25 கால்நடை வளர்ப்பாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.