குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை திங்கட்கிழமை (24.06.2024) முற்பகல்-11 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாகப் பன்னிரெண்டு தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக மேற்படி ஆலய மஹோற்சவம் நடைபெறும்.
அடுத்த மாதம்-02 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை-05.30 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 03 ஆம் திகதி புதன்கிழமை இரவு-07.30 மணிக்கு சப்பரத் திருவிழாவும், 04 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 05 ஆம் வெள்ளிக்கிழமை முற்பகல்-11 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் இரவு-07.30 மணிக்கு கொடியிறக்கத் திருவிழாவும் இடம்பெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.