குப்பிழானில் நாளை இலவசக் கால்நடை மருத்துவ நடமாடும் சேவை

உடுவில் கால்நடை மருத்துவர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இலவசக் கால்நடை மருத்துவ நடமாடும் சேவை நாளை வியாழக்கிழமை (20.06.2024) காலை- 09 மணி தொடக்கம் மாலை- 03 மணி வரை குப்பிழான் வீரமனை கன்னிமார் கோவிலடியில் இடம்பெறவுள்ளது.

குறித்த நடமாடும் சேவையில் கால்நடைகளுக்கான மருத்துவ சேவை, கால்நடை வளர்ப்புத் தொடர்பான ஆலோசனை, தடுப்பு மருந்து வழங்கல், மாடுகளுக்குக் காதடையாளமிடல், பண்ணைகளைப் பதிவு செய்தல், திணைக்களப் பிரசுரங்கள் வழங்குதல் போன்ற சேவைகள் இலவசமாக வழங்கப்படும். குப்பிழான் கிராமத்தவர்கள் மாத்திரமன்றி அயற் கிராமத்தவர்களும் இந்த இலவச நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயன்பெற முடியுமென உடுவில் கால்நடை மருத்துவர் அலுவலகப் பொறுப்பதிகாரி மருத்துவர் திருமதி.ஆர்.மீனயோகினி தெரிவித்துள்ளார்.