புத்தகங்கள், வாசிப்பு, பரவலாக்கம் செயற்திட்ட அரங்கு நிகழ்வு நாளை புதன்கிழமை (26.06.2024) மாலை-03 மணி முதல் இரவு-07 மணி வரை பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூதுக் கலையகத்தில் இடம்பெறும்.
நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளரும், பதிப்பாசிரியருமான பவா செல்லத்துரை கலந்து கொண்டு உரை ஆற்றவுள்ளார். நிகழ்வில் நூல் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறுமெனவும், நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.