குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாள் கும்பாபிஷேக தின சங்காபிஷேகம்

குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நாளை வியாழக்கிழமை (27.06.2024) காலை-08 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.

1008 சங்காபிஷேகத்தைத் தொடர்ந்து வசந்தமண்டபப் பூசை நடைபெற்றுக் கெளரி அம்பாள் உள்வீதி, வெளிவீதி உலா வரும் திருக்காட்சி இடம்பெறும். அதனைத் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளதாக மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.