மாவிட்டபுரத்தில் நாளை நினைவுப் பேருந்து நிலையத் திறப்பு விழா
மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி.தம்பையா நாகம்மாவின் முதலாம் ஆண்டு சிரார்த்த திதியை முன்னிட்டு நினைவுப் பேருந்து நிலையத் திறப்பு விழா நாளை வெள்ளிக்கிழமை (28.06.2024) முற்பகல்-11.30 மணி முதல் காங்கேசன்துறை வீதி, அரசடிச் சந்தி, மாவிட்டபுரம் எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.

மாவை பாரதி மறுமலர்ச்சி மன்றத் தலைவர் இ.சாந்தகுமார் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா பிரதமவிருந்தினராகவும்,  வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சுதர்ஜன், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சோ.கலையமுதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.