சிவத்தமிழ்ச் செல்வியின் பதினாறாவது ஆண்டு குருபூசை வைபவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின் முன்னாள் பெருந் தலைவர் சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி.தங்கம்மா அப்பாக்குட்டியின் பதினாறாவது ஆண்டு குருபூசை பைபவம் நாளை புதன்கிழமை (19.06.2024) காலை-09 மணி முதல் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய அன்னபூரணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட இந்துநாகரிகத் துறைப் பேராசிரியர் ச.முகுந்தன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

நிகழ்வில் மூத்த சிவாச்சாரியார்களுக்கான விருது வழங்கல், 'இன்று வடக்கில் பெண் கல்வித் தலைமைத்துவம்' எனும் தலைப்பில் சிறப்புரை என்பன இடம்பெறும். நண்பகல்-12 மணியளவில் மகேஸ்வர பூசை (அன்னதானம்) இடம்பெறும்.

இதேவேளை, மேற்படி குருபூசை வைபவத்தில் அனைவரையும் பங்குபற்றுமாறு தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய நிர்வாகசபையினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

(செ.ரவிசாந் )