'உடுப்பிட்டிச் சிங்கம்' என மக்களால் அழைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உப சபாநாயகருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 101 ஆவது ஜனனதின நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை (20.07.2024) காலை-08.30 மணி முதல் யாழ்.நெல்லியடிச் சந்தியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலையடியில் இடம்பெற்றது.
கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிவசிதம்பரத்தின் உருவச் சிலைக்கு மலர்மாலைகள் சூடி, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.