கொழும்புத்துறை இந்துமகாவித்தியாலயத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் நடைபவனி

யாழ்.கொழும்புத்துறை இந்துமகா வித்தியாலயத்தின் 150 ஆவது  ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் நடைபவனி பாடசாலைச் சமூகத்தினரின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (19.07.2024) காலை-08 மணியளவில் மேற்படி பாடசாலையின் முன்பாக ஆரம்பமாகி முன்னெடுக்கப்பட்டது.  

பாடசாலையின் அதிபர் க.தவகீஸ்வரன் தலைமையில் ஆரம்பமான குறித்த நடைபவனி கொழும்புத்துறை வீதி ஊடாகப் பாஷையூரை அடைந்து கடற்கரை வீதி ஊடாக துண்டிச் சந்தி, ஏ.வி.வீதி, யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை ஊடாக மாம்பழம் சந்தியை அடைந்து இலந்தைக் குளம் வீதி ஊடாக நேற்று முற்பகல்-11 மணியளவில் மீண்டும் பாடசாலையைச் சென்றடைந்தது. 


இந் நடைபவனியில் பாடசாலை அதிபர், மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், கிராம மக்கள் என 600 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். நடைபவனியில் கலந்து கொண்டவர்களுக்கு கொழும்புத்துறை சனசமூக நிலையத்தவர்களால் குளிர்பானம் பரிமாறப்பட்டது.

இதேவேளை, மேற்படி பாடசாலையின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முதல் நிகழ்வாக மாபெரும் நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.