நவாலி தெற்கு அ.மி.த.க. பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கான பெற்றோரியம், சிறுவர் துஷ்பிரயோகம், சுகாதாரம் மற்றும் உணவுப்பழக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் மேற்படி பாடசாலை அதிபரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.