சோலைக்குயில் அவைக்காற்றுக் கழகத்தின் 36 ஆவது ஆண்டு நிறைவு விழா

சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 36 ஆவது ஆண்டு நிறைவு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (21.07.2024 ) காலை-09 மணி முதல் பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயத்தின் கல்யாண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் சி.சிவன்சுதன், தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் திருமதி. சிவகெங்கா சுதீஸ்னர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில மொழிக் கற்கைகள் பீட முன்னாள் தலைவர் கலாநிதி.கருணாதேவி சிவாஜி, ஓய்வுநிலை ஆசிரியை திருமதி.ராஜி கெங்காதரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் விருதுகள் வழங்கல், தண்பதப் பெருவழி, Decline and Recovery ஆகிய நூல்கள் வெளியீடு மற்றும் பரிசில், சான்றிதழ்  வழங்கல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.