கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையத்தினதும் குமரன் விளையாட்டுக் கழகத்தினதும் ஆதரவில் இயங்கிவரும் குட்டிச்சுட்டி முன்பள்ளிச் சிறார்களின் தமிழ்த்தின விழா- 2024 நாளை ஞாயிற்றுக்கிழமை (21.07.2024) மாலை-03 மணி முதல் கோண்டாவில் இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மேற்படி நிலையத் தலைவர் து.சுதன் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் வடக்கு மாகாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திருமதி.வேழினி பாலேந்திரா பிரதம விருந்தினராகவும், யாழ்.வேலணை மேற்கு நடராஜ வித்தியாலயத்தின் ஆசிரியர் சுப்பிரமணியம் தனசீலன், குமரன் விளையாட்டுக் கழகத்தின் கனடாக் கிளை உறுப்பினர் நல்லையா லிங்கேஸ்வரன், ஓய்வுநிலை அதிபர் கணிதச் சுடர் சண்.வாமதேவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.