ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வு நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கலும்

பிரித்தானிய  சமூக முன்னேற்ற மையத்தின் மரபுரிமை அலகின் நிதிப் பங்களிப்புடனும்  யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடனும் முன்னெடுக்கப்பட்ட ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வு- 2024 நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கலும்  இன்று சனிக்கிழமை (20.07.2024) மாலை-03.30 மணி முதல் யாழ்ப்பாணம் மத்திய கலாசார நிலையத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர். பரமு புஷ்பரட்ணம்  தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் சத்திரசிகிச்சைப் பேராசிரியரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மருத்துவ பீடாதிபதியுமான பேராசிரியர். சுப்பிரமணியம் ரவிராஜ் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.