சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தினரின் ஏற்பாட்டில் சமூக ஊடகங்களின் வகிபாகத்தில் எழும் கேள்விகள்... எனும் கருப் பொருளிலான கருத்துரையும் கலந்துரையாடலும் நாளை சனிக்கிழமை (20.07.2024) மாலை-04 மணி முதல் கொக்குவில் சந்திக்கு அருகிலுள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளர் வேலும்மயிலும் சேந்தன் தொடக்க உரையையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வெகுஜன ஊடகம் மற்றும் தொடர்பாடல் கற்கைநெறியின் வருகைதரு விரிவுரையாளர் கனகநாயகம் வேல்தஞ்சன் கருத்துரையையும் ஆற்றுவர். அதனைத் தொடர்ந்து சபையோரின் கருத்துரைகளுடன் திறந்த கலந்துரையாடலும் நடைபெறும்.