மாவிட்டபுரம் கந்தனின் புதிய கைலாச வாகன வெள்ளோட்ட விழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் புதிய திருக்கலாச வாகன வெள்ளோட்ட விழா நாளை வெள்ளிக்கிழமை (19.07.2024) பிற்பகல்-12.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, இவ் ஆலயக் காம்யோற்சவப் பெருவிழாவின் திருக்கைலாச வாகனத் திருவிழா எதிர்வரும்-25 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு இடம்பெறுமென மாவை ஆதீன கர்த்தா மகாராஜஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள் தெரிவித்துள்ளார்.