கோப்பாயில் நாளை பிரதேச தொழிற்சந்தை

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும், கோப்பாய்ப் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் பிரதேச தொழிற்சந்தை-2024 நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (19.07.2024) காலை-09 மணி முதல் கோப்பாய்ப் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் வேலைவாய்ப்பு, தொழில் வழிகாட்டல், தொழில்சார் பயிற்சி மற்றும் வேலைதேடுவோரைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் நடைபெறுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.