கீரிமலையில் உயிர் காக்கும் உன்னத பணிக்கு கைகொடுத்த 41 குருதிக் கொடையாளர்கள்!

நாட்டில் நிலவிவரும் குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு கருகம்பனை தமிழ்மன்ற சனசமூக நிலையம், கருகம்பனை இந்து இளைஞர் கழகம், இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று  ஞாயிற்றுக்கிழமை (28.07.2024) காலை-09 மணி முதல் மாலை-03 மணி வரை கீரிமலை கருகம்பனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் 41 குருதிக் கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதி சேகரிப்பில் ஈடுபட்டனர். 

இந் நிகழ்வுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளையின் தெல்லிப்பழைப் பிரிவினர் பூரண அனுசரணை வழங்கினர்.