சுன்னாகம் கதிரமலைச் சிவன் சொர்ணாம்பிகை அம்பாள் ஆடிப்பூர மஹோற்சவம் ஆரம்பம்

பிரசித்திபெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் ஆலயத்தின் சொர்ணாம்பிகை அம்பாள் வாசல் குரோதி வருட ஆடிப்பூர  மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை (29.07.2024) முற்பகல்-10 மணியளவில்   கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. 

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் மஹோற்சவம் நடைபெறும்.  அடுத்த மாதம்-03 ஆம் திகதி சனிக்கிழமை சுமங்கலித் திருவிழாவும், 05 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு சப்பரத் திருவிழாவும், 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு-07 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள் புதன்கிழமை முற்பகல்-10 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறும்.