50 ஆவது ஆண்டாக அழகிய சித்திரத் தேரில் கோண்டாவில் ஆசிமட அரசடி விநாயகர் வீதி உலா

கோண்டாவில் கிழக்கு ஆசிமட அரசடி விநாயகர் ஆலயக் குரோதி வருட மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா கடந்த வியாழக்கிழமை (11.07.2024) வெகுசிறப்பாக நடைபெற்றது.

காலை-09.30 மணியளவில் அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்கத் திருப்பவனி ஆரம்பமானது. பஞ்சமுக விநாயகப் பெருமான் சித்திரத் தேரில் எழிலுறப் பவனி வந்த காட்சி அற்புதமானது. சித்திரத் தேர் முற்பகல்-10.30 மணியளவில் இருப்பிடம் சென்றடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.   

பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் இவ் ஆலயத் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர். 

இதேவேளை, இவ் வருடம் 50 ஆவது ஆண்டாக இவ் ஆலயத்தில் விநாயகப் பெருமான் அழகிய சித்திரத் தேரில் வீதி உலா வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

(செ.ரவிசாந் )