தென்மராட்சி கிழக்கு அபிவிருத்தி ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு

தென்மராட்சிக் கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தினால் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை- 2022(2023) இல் தோற்றிப் பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களைத் தென்மராட்சி அபிவிருத்தி ஒன்றியம் கௌரவிக்கவுள்ளது.

எனவே, தகுதியுடைய தென்மராட்சி கிழக்குப் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட மாணவர்கள் எதிர்வரும்- 17 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு தென்மராட்சி கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தினர் கேட்டுள்ளனர்.