உடுவில் பிரதேச செயலகமும் இணுவைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆடிப்பிறப்பு விழா-2024 ஆடிப்பிறப்புப் பண்டிகை நன்னாளான நாளை புதன்கிழமை (17.07.2024) பிற்பகல்-02.30 மணி முதல் இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இணுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் ச.முகுந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் உடுவில் பிரதேச செயலர் பாலசுந்தரம் ஜெயகரன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
நிகழ்வில் வில்லுப்பாட்டு, குழு நிகழ்ச்சி, பேச்சு போன்ற பல்வேறு கலைநிகழ்வுகளும் நடைபெறும். அனைவரையும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.