நாடு தழுவிய ரீதியில் அதிபர்- ஆசிரியர்கள் சுகவீன லீவுப் போராட்டம்

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க வலியுறுத்தியும், ரணில்- ராஜபக்ச அரசாங்கத்தின் அடக்குமுறை களைக் கண்டித்தும் இன்று செவ்வாய்க்கிழமை (09.07.2024) அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து மீண்டும் நாடு தழுவிய ரீதியில் சுகவீன லீவுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்கங்களின் தீர்மானத்துக்கமைய இன்றையதினம் சுகவீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதிபர்- ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இன்றையதினம் வடக்கு மாகாணம் உட்பட நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. 

இதேவேளை, இன்றைய அதிபர்- ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் வெற்றியளித்துள்ளதாகவும், ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் தெரிவிப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.